BREAKING NEWS

விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இன்று காலை 7 மணி அளவில் புது காலனி வழியாக பரமசிவன் கோவில் செல்லும் மண் பாதையில் உள்ள சாய்பாபா கோவிலின், தெற்கு புறம் செல்லும் கழிவுநீர் ஓடையின் அருகில் முருகன் என்ற பெயருடைய விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

 

காவல்துறையால் மேற்படி நபரின் பிரேதமானது பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

இறந்த நபர் அருகே கிடந்த மருத்துவமனை சீட்டில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மற்றும் சீட்டில் முருகன் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் உடனடியாக போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காவல் ஆய்வாளர்,போடி நகர் காவல் நிலையம். தேனி மாவட்டம்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )