வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும்,
எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி சார்பாக வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் வட்டாட்சியரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழஙக்கோரி கோரிக்கை மனுவை வழங்கினர்.