BREAKING NEWS

வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதல்: 20 பயணிகள் காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதல்: 20 பயணிகள் காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

கடலூர்: சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது.

பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. அப்போதுபஸ்சின் பின்னா ல் வந்த சரக்கு லாரி டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

லாரி பஸ் மீது வேகமாக மோதியது பஸ்சின் பின்புறம் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் விபத்துக்குள்ளான பஸ் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )