வேலூர் செல்லியம்மன் கோயிலுக்குள் காலணி அணிந்து வந்த திமுகவினர்!
வேலூர் செல்லியம்மன் கோயிலுக்குள் காலணி அணிந்து வந்த திமுகவினர்!

வேலூரில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என அமைச்சர் துரைமுருகன் வேதனையடைந்தார். கோவிலுக்கு சொந்தமான இடத்தை பேருந்து நிலையம் கட்ட கொடுக்க வேண்டுமென அமைச்சர் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் 35 மாவட்டங்களுக்கு விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். ஆலயத்தினுள்ளேயே காலணி அணிந்து வந்த திமுகவினரை பார்த்த பக்தர்கள் முகம் சுளித்தனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத் ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் , நந்தகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில் அறங்காவல் குழு தலைவராக அசோகன், உறுப்பினராக அருணாச்சலம், தேவி, சுகுமார் , மகேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர் .கோவினுள் நடைபெற்ற இந்த விழாவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காலணி அணிந்துகொண்டு வந்து விழாவில் கலந்துகொண்டது பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மட்டும் தற்போது அறங்காவல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 மாவட்டங்களுக்கு அடுத்த மாதத்திற்குள் அறங்காவல் குழு நியமிக்கப்படும் என்று பேசினார் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
