BREAKING NEWS

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தங்களது உயிரை கையில் பிடித்து கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.

இப்படி பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியான சிலை வசதி இல்லாமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொதுமக்கள் நிம்மதியாக நடந்து செல்லவும்,

இருசக்கர வாகனங்களில் செல்ல வழிவகையை ஏற்படுத்தி தர வேண்டும் என ஒட்டுமொத்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக கனமழை பெய்தால் பொதுமக்கள் வெளியே போவதற்கு வழி இல்லாமல் மிகவும் தவியாய் தவிக்கின்றனர்.

இப்படி பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கும் சாலையை சீர்செய்து தர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.முன்னா என்பவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இனி மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this…

CATEGORIES
TAGS