வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடுகளில் இயங்கும் தனியார் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வீடுகளில் இயங்கி வருகிறது அப்படியாக இயங்கி வரும் வீடுகளில் விளையாட்டு மைதானம் கிடையாது எதா ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு துறை வாகனங்கள் செல்லக்கூடிய அளவுக்கு வசதியும் கிடையாது இப்படிப்பட்ட இடங்களில் தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாகவும் அதற்கு தொடக்கப்பள்ளி அலுவலரான விஜயலட்சுமி என்பவர் துணை போவதாகவும் பேரணாம்பட்டு சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் பெற்றோர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
மேலும் பேரணாம்பட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளான செயின் பால்ஸ் மெட்ரிக் பள்ளி கிரீன்வேலி பள்ளி கலைமகள் பள்ளி இந்த மூன்று தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் மாணவ மாணவிகளுக்கு ஏற்ற விளையாட்டு மைதானம் குடிநீர் வசதி போன்ற வசதிகள் இருப்பதாகவும் அதே போல் பேரணாம்பட்டில் வீடுகளில் இயங்கி வரும் பள்ளிகளான விஸ்டம் அல் அமீன் அஸ்ஸாம்ஸ் போன்ற பள்ளிகள் இது போன்ற பள்ளிகளை ஏற்படுத்தாமல் வீடுகளில் செயல்பட்டு வருவதாகவும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அலுவலரான விஜயலட்சுமிக்கு மாதா மாதம் ஒவ்வொரு பள்ளியின் மூலமாகவும் 10,000 ரூபாய்க்கு மேல் லஞ்சம் சென்று சேர்வதாகவும் அதை விஜயலட்சுமி நேரடியாக வாங்காமல் ஏதோ ஒரு அக்கவுண்ட் நம்பரை கொடுத்து அந்த அக்கவுண்டில் போட்டு விடுங்கள் என்று கூறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுபோல் தனியார் பள்ளியில் வீடுகளில் இயங்கும் தகவலைச் சொல்ல வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான முனுசாமிக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முனுசாமி கைபேசியை தொடர்பு கொண்டால் அவர் கைபேசியை அட்டென்ட் பண்ணுவதில்லை என்றும் வேண்டும் என்று அதை ஸ்விட்ச் ஆப் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது மேலும் தனியார் பள்ளிகளில் அதிக அளவிலான கட்டணங்களை வசூல் செய்ய போட்டோ போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிப்பதாகவும் இதை கண்டு கொள்ளாமல் இருக்க தொடக்க தொடக்கப்பள்ளி அலுவலரான விஜயலட்சுமிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாத மாதம் வழங்கப்படுவதாகவும் தனியார் பள்ளியின் நிர்வாகத்தினரே ஒரு சில பத்திரிகையாளர்களிடம் கூறுகின்றனர் மேலும் இந்த சம்பவங்கள் குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடர்பு கொண்டால் அவர் வேண்டுமென்று வரும் கால்களை கட் செய்வதாகவும் கூறப்படுகிறது.
தனியார் பள்ளியில் நடைபெறும் அவலங்களை ஒரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே கண்டுகொள்ளவில்லை என்றால் வேறு யார் அந்த மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு மேலும் இது போன்ற போதிய இட வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான முனுசாமியின் மறைமுக அனுமதியோடு நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்து தவறு என தெரியவரும் பட்சத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மீதும் தொடக்கக் கல்வி அலுவலரான விஜயலட்சுமி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பேரணாம்பட்டு பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
