BREAKING NEWS

வேலூர்மாவட்டம் உலக சாதனைக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதும் வழக்கறிஞர்.

வேலூர்மாவட்டம்    உலக சாதனைக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதும் வழக்கறிஞர்.

பகவத் கீதை, பைபிள் எழுதி சாதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்

இவர் குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சிறுவயது முதலே எழுத்துக்கள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அனைத்து மொழி வடிவங்களை புதிய வடிவம் கொண்டு எழுத வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இவர் ஆங்கிலத்தில் பைபிளை முழுமையாக 948 பக்கங்கள் தலைகீழாக எழுதியுள்ளார்.

இதேபோல் 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதியுள்ளார்.

இதேபோன்று திருக்குறளை ஒரு எழுத்து நேராகவும் அடுத்த எழுத்து தலைகீழாகவும் என 1330 குறள்களில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் மாற்றி மாற்றி எழுதியுள்ளார்.

மேலும் கண்ணாடியில் மேல் எழுதும் எழுத்துக்கள் உள்ளிருந்து பார்த்தால் வேறு வடிவங்களில் தெரியும் அந்த வடிவம் கொண்ட எழுத்துக்களை எழுதும் திறமை கொண்டுள்ளார் திருக்குறள்களையு அவ்வாறே எழுதியுள்ளார்.

மேலும் ஆங்கில சுருக்கெழுத்து வடிவமுள்ள புத்தகத்தை ( Pitman short hand key) முழுவதும் தலைகீழாக எழுதி சாதனை படைத்துள்ளார்.

மேலும் அரபு மொழியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நூலான குரானையும் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும் தலைகீழாக எழுதும் பணியை தற்போது துவங்கியுள்ள உள்ளார் அவற்றை விரைந்து முடித்து உலக சாதனைக்கு அனுப்பி வைப்பதற்காக முயற்சித்து வருகின்றார்

மேலும் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் மாற்று வடிவத்தில் அதாவது தலைகீழாக எழுத வேண்டும் என்பதே இவருடைய மிகப்பெரிய சாதனை குறிக்கோளுடன் இருந்துவருகிறார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )