வேளாண் துறை சார்பில் வயல்வெளிபள்ளி பயிற்சி வகுப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் வயல்வெளிப்பள்ளி பயிற்சி வகுப்பு துவங்கியது. ஆறுகட்டமாக நடக்க உள்ள இந்த வகுப்பின் துவக்க விழா வேளாண் இயக்குநர் ரவிசங்கர் தலைமையில் நடந்தது. மேலநெட்டூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
மானாமதுரை வேளாண் உயிர்உர உற்பத்தி மைய மூத்த வேளாண் அலுவலர் கருணாநிதி திருந்திய நெல்சாகுபடி, நெல்ரக தேர்வு, விதை நேர்த்தி, உயிர்உரங்கள் இடுவது பற்றி விளக்கினார்.
விவசாயி சரவணபாலன் பயிர் நாற்றாங்கால் பார்வையிடப்பட்டு உயிர் உரங்கள் கலந்ததை விதைகள் நடுவது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் நிதியரசன் நன்றி கூறினார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண் அலுவலர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.
படவிளக்கம்: மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் உழவர் வயல்வெளிபயிற்சி முகாம் நடந்தது.
செய்தியாளர் வி.ராஜா.