ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்,
மத்திய அரசு ஹிந்தியை கட்டாயம் மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்,
மேலும் ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்,
புதிய கல்விக் கொள்கை என்று கூறி ஏழை எளிய மாணவர்களின் கல்லூரி கனவை பறிக்க நினைக்கும் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்,
மாநில கல்விக் கொள்கை பின்பற்ற வேண்டும் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட பதினைந்து மேற்பட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து,
தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்தஞ்சை அரசு சரபோஜி கல்லூரிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்