BREAKING NEWS

அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!

அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் திமுக நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பில் வெள்ளிவாள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் மருத்துவர் வி. எஸ். விஜய், மாவட்ட பஞ்சாயத்து பெருந்தலைவர் அணைக்கட்டு மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

CATEGORIES
TAGS