அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு. இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள சந்திய பாளையம் ராமசாமி என்பவரது தோட்டத்தில் யானை தந்தங்களைபதுக்கி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் அப்பகுதிக்குச் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ராமசாமி என்பவரது தோட்டத்தில் தென்னை மட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தந்தங்களை பதுக்கி வைத்த வரதராஜன். ராமசாமி. பிரபு குமார். மாரசாமி. விஜயகுமார். ரஞ்சித். ஆகியோரை போலீசார் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தலைமறைவான பர்கூர் பெஜில் பாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தேஷ் பர்கூர் பகுதியை சேர்ந்த முருகன் ஆகியோரை போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
