BREAKING NEWS

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு  அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பட்டையன் குளக் கரையில் அமர்ந்து ஊராட்சி தலைவர் வீரஅழகம்மாளை கண்டித்து துணை தலைவர் மணிகண்டன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

அம்பட்டையன் குளத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் படிக்கட்டுகள் அமைத்ததாக கூறி ஊராட்சி தலைவர் வீரஅழகம்மாள் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறியுள்ளார். துணைத் தலைவர் மணிகண்டன். மேலும் ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் கடந்த செப்டம்பர் மாத வரவு செலவு தொகையிலும், அக்டோபர் மாத வரவு செலவு தொகையிலும் செலவு செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக பலஆயிரம் ரூபாய் கூடுதலாக கணக்கு போட்டு ஊராட்சித் தலைவர் முறைகேடு செய்ததாகவும்,

 

ஒக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தெருவில் பதினைந்தாவது நிதி குழு மானியத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் பைப்லைன் அமைத்ததாக கூறி ஊராட்சித் தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் கூறியுள்ளார் துணைத் தலைவர் மணிகண்டன். இதுபோல பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் குளக்கரையில் அமர்ந்து பட்டினி போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

 

 

துணைத்தலைவர் மணிகண்டன் . இத்தகவல் அறிந்ததை அடுத்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் இராஜதானி காவல்துறையினர் துணைத் தலைவர் மணிகண்டனிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஊராட்சிதலைவரை கண்டித்து துணைத்தலைவர் புகார் கூறி குளக்கரையில் அமர்ந்து தனி ஒரு ஆளாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )