BREAKING NEWS

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை திருநெல்வேலி கோட்டம் சார்பாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது

இந்த சிறப்பு முகாமுக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமையாற்றினார்

நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் திருமதி மலர்விழி அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்

நிகழ்ச்சியில் நீர்வளம் குறித்த குறும்படத்தினை மாணவர்கள் கண்டு களித்தனர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி உடற்கல்வி இயக்குனர் திரு சாம் நியூட்டன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு அண்டோ ஆரோக்கிய ஜோதி மற்றும் பள்ளி மாணவர்கள் செய்தனர்

Share this…

CATEGORIES
TAGS