அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை!

கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்!
திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மது பாட்டில் விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்த நிலையில்,
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் காவல ஆணையர் ஆகியோர் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கூட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி சட்ட விரோத மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்து சட்ட விரோதம் மதுபாட்டில் விற்பனை செய்வதை முற்றிலும் தடுத்தி நிறுத்தி வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கூடங்களில் காலை முதல் மது பாட்டில் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கூட்டங்களில் அதிகாலை முதலே மது பாட்டில் விற்பனை அமோக விற்பனை நடப்பதாகவும் அதுவும்
தாராபுரத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையம் அருகே உள்ள மதுபானக்கூடங்களில் அதிகாலையில் மது பாட்டில் விற்பனை நடக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதுவும் குறிப்பாக தமிழக முதல்வர் திருப்பூர், கோவை மாவட்டம் உடுமலை, தாராபுரம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த நேரத்தில் அரசு டாஸ்மார்க் மதுபான கூட்டங்களில் சட்டவிரோதமாக அதிகாலை முதல் மது பாட்டில் விற்பனை நடப்பது தான் வேதனையாக இருப்பதாகவும்,
அதுமட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒரு சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களை செய்து வருவதாகவும்,
இதற்கு திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் உடந்தையாக செயல்படுவதாகவும் அதற்காக மதுபானக்கூடங்கள் நடத்துபவர்கள் மாதம் ஒரு பெரிய தொகையை மாமூலாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு கொடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப் படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சட்டவிரோத மது பாட்டில் விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் & திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் காவல் ஆணையருக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல்பாட்டை.