BREAKING NEWS

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதிதாக பதவியேற்பு.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதிதாக பதவியேற்பு.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., (Tmt.J.Anne Mary Swarna, IAS.,) இன்று (22.05.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :-

 

2005 ஆம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றிபெற்று திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், தொடர்ந்து கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும், பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும். பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளேன்.

 

அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS