அலங்காநல்லூரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனசேகரன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார். தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார்.
இதில் 15 நபர்களைக் கொண்ட மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது. தமிழக அரசாணை எண் 115, 139, 152ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.
வருகின்ற 9ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.