அ.தி.மு.க., பொதுக்குழு உயர் நீதிமன்றம் தீர்ப்பை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

சசிகலா, டிடிவி இணைப்பது பற்றி முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒற்றை தலைமையாக வந்த பின்னர் அவர் முடிவு எடுப்பார் – என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி:
முன்னாள் முதல்வர், பழனிசாமி தலைமையில், கடந்த, ஜூலை, 11ல், கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது, அதில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும், அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என கூறிய தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது எனவும் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மற்றும் சட்டமன்ற அலுவலக முன்பு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர மன்ற உறுப்பினர்கள், கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மேல ஈரால் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் போர்டு சாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களும் கூறுகையில் :
இந்த தீர்ப்பை பார்த்து ஆச்சரியப்படுது ஒன்றுமில்லை இது நியாயத்தின் தீர்ப்பு நீதிமன்றமாக இருந்தாலும் சரி தேர்தல் ஆணையம் இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் மெஜாரிட்டியாக யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் வெற்றி பக்கம் தான் நீதி இருக்கும்
ஒற்றைத் தலைமை தான் என்று முடிவை ஏற்றுக்கொண்டு வந்தால் இணைத்துக் கொள்ள தயார் ஆனால் ஒற்றைத் தலைமை என்பது முடிவு மாற்று கருத்து இல்லை
அதிமுக தலைமை எங்கே இருக்கின்றதோ அங்க தான் அதிமுக இருக்கும் தொண்டர்கள் இருப்பார்கள் தொண்டர்களும் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறது நாங்கள் வலுவாக இருக்கிறோம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் இணைத்து கொள்வோம் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது அரசியல் கட்சி நடைமுறையில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி விட்டது
நாங்க எதை பார்த்து பயப்படவில்லை 98 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளார்கள் 2 சதவீதம் உள்ளவர்களை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்
இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் போயிருக்கலாம். ஆனால் அங்கு நான்கு பேர் தான் இருக்கலாம் அவர்கள் கூட திரும்ப எங்களுடன் வந்து இணையலாம்
தமிழகத்தில் யாரும் வளர முடியாது தமிழகத்தில் பெரிய இயக்கமாக அதிமுகவில் உள்ளது எத்தனையோ பிளவுகளை அதிமுக பார்த்து உள்ளோம் இது ஒன்றும் புதிதல்ல
பொறுப்பில் உள்ளவர்கள் நிர்வாகிகள் அணி மாறலாம் ஆனால் அதிமுகவை பொருத்தவரை அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான் தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது
சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்த கேள்வி
ஒற்றைத் தலைமை வந்தவுடன் இது குறித்து முடிவெடுப்போம்.