ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்
ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்.
இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்.
தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனிக்கு வந்தார். மதுரையில் இருந்து திருமங்கலம் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய மூன்று ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மாலை 6:00 மணிக்கே ஆண்டிபட்டி நகரில் குவிந்தனர். ஆண்டிப்பட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுகவினர் வந்திருந்தனர். இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆண்டிபட்டிக்கு வரவில்லை. இதனை எடுத்து இரவு 10 மணி வரை ஒலிபெருக்கிகளில் திமுக கட்சி பாடல்கள் ஒலிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நின்றிருந்த தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவின் படி ஒழிப்பிற்குகள் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுமார் 10.15 மணியளவில் ஆண்டிபட்டிக்கு திறந்த வெளி வாகனத்தில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலியில் நின்றபடியே பொதுமக்களிடம் கையேசைத்தபடி தேனிக்கு சென்றார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரின் பேச்சை கேட்பதற்காக காத்திருந்த பொதுமக்கள் கடைசியில் அமைச்சர் பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.