ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார்.
சேலம் மாவட்டம், தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதிக்கான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அவர்களது திருவுருவ படத்தற்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
வன்னியர் போராட்டம்) என்பது தமிழ்நாட்டில், வன்னிய சமுதாய மக்களால் , 1987 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17ஆம் நாள் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் ஆகும்.வன்னியர் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னியர் சாதி சங்கத்தினரால் (பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி) நடத்தப்பட்ட போராட்டமாகும்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டம் மரு. இராமதாசின் தலைமையில் நடைபெற்றது. இந்த இட ஒதுக்கீடு போராட்டகாரர்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கும் செப்டம்பர் 17ஆம் நாளான இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆர்.வி.பச்சமுத்து தலைமையில்.

ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கசாப்பு செந்தில்குமார் ஏற்பாட்டில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும்
இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பொன்மலை.
மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல் மணி. ஒன்றிய நிர்வாகிகள் சின்னசாமி, செல்லதுரை, சுப்பிரமணி சுப்பன் தீரன் சிலம்பு மற்றும் இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
