ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.

SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் அப்சல் கான் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயளாலர்
ஓம் பிரகாஷ் மற்றும் ஆம்பூர் விடுதலை சிறுத்தை கட்சிதொகுதி செயலாளர் வெங்கடேஷ், திராவிட கழகம் நிர்வாகிகள், SDTU மாவட்ட தலைவர், மற்றும் WIM மாவட்ட தலைவர் SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் இர்பான் கான், மாவட்ட பொருளாளர்
சாதிக்,
ரியாஸ் அஹ்மத் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி, கிளை, நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் ஜமாஅத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு இப்தார் நிகழ்சியினை சிறப்பித்தார்கள். இறுதியாக தொகுதி செயளாலர் பயாஸ் அஹ்மத் நன்றியுரை ஆற்றினார்.