ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.

பலத்த காயத்துடன் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதி.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மதிக்கத்தக்க நபர், ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர், இவர் எதார்ச்சையாக யாரையோ சந்திக்க ஆற்காடு பைபாஸ் வந்துள்ளார்.

இங்கு ஒரமாக இருசக்கர வாகனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த அரசு வாகனம் (ஜீப்) பொலேரோ அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பாஸ்கர் பறந்து கீழே விழுந்தார். பாஸ்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த பொலோரோ கார் பாஸ்கரின் இருசக்கர வாகனத்தை கொஞ்ச தூரம் இழுத்துச் சென்றுவிட்டது என தெரிவித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக விபத்துக்குள்ளான நபரை மீட்டு ஆம்புலன்ஸை வரவைத்து வாலாஜா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
