இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறிப்பு; ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.

திருவள்ளுர் மாவட்டம்., கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறித்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பு. ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.
பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் திருப்பதி (46). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு லோடு ஏற்று வந்தார். பின்னர் சிப்காட் பகுதியின் சாலையோரம் லாரியை நிறுத்தி மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் தனியாக வந்த நபர் ஒருவர், போனை பறித்து தம்பி சென்றார்.
தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்தில் டிரைவர் திருப்பதி அளித்த புகாரின்படி கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல் முருகன் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் குமணன் தலைமையிலான போலீசார், போனை பறித்து சென்ற நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அதேபோல் அருகாமையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமரா பதிவில் சிக்கிய புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த சீனிவாசன் (24), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போன் திருடி செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாரி ஓட்டுநரிடம் செல்போன் பறித்து சென்றவனை ஒரு மணி நேரத்தில் பிடித்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமணன் தலைமையிலான போலீசருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
