இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..
தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்ளால் புனித வெள்ளி தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தேதி விபூதி புதன் அன்று தொடங்கிய நோன்பு துவங்க பட்டு நாற்பதாவது நாள் முடிவடையும் தினமான இன்று புனித வெள்ளி என்று கருதப்படுகிறது.
இந்த வாரம் முழுவதும் உள்ள கிழமைகள் அனைத்தும் புனித கிழமைகளாக கருதப்பட்டு வருகிறது அதே போல் நேற்று புனித வியாழன் அன்று இயேசுநாதர் அவர்களுக்கு கடைசி விருந்து வழங்கும் நிகழ்வும் அதனை அடுத்த நாளான இன்று ஏசு நாதரை சிலுவையில் அறைந்து அடக்கம் செய்யும் நிகழ்வு நாள் புனித வெள்ளியாகும்,
அதனை அனுசரிக்கும் விதமாக காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவையில் அறையும் சிலுவை நிகழ்வு பாதை அந்த ஆலயத்தின் இளைஞர்களால் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
இதில் 7 வார்த்தைககளின் ஆராதனையை அருட்தந்தைகளான அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி,ஆகியோர் நடத்தினர் இதில் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு முழங்காலிட்டு பாடல்கள் பாடி வழிபட்டனர்.