இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் பிழைக்க வைத்திடும் பயிற்சி மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,
திடீர் மாரடைப்பினால் உயிரிழப்பதை “மார்பு அழுத்தம்” மூலம் அமெரிக்காவில் 80 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவதுபோல், தமிழகத்திலும் இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு இரண்டு கைகளாலும் மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் பிழைக்க வைத்திடும் பயிற்சியை இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமபுற கல்லுாரி மாணவர்களுக்கு தஞ்சையில் அமெரிக்க தமிழ் மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்திட உள்ளதாகவும் அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கத்தினர் தகவல்:
பேட்டி: 1 Dr. கபிலன் தர்மராஜன்- இருதய மருத்துவர்- அமெரிக்கா
2 Dr. ஐன்ஸ்டைன் அருணாச்சலம் – இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்- அமெரிக்கா
அமெரிக்காவில் மருத்துவர்களாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள், அமெரிக்க தமிழ் மருத்துவர் சங்கம் மூலம், அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இருதய துடிப்பு நின்ற ஒருவரை சிபிஆர் எனப்படும் மார்பு அழுத்தம் கொடுத்து காப்பாற்ற உதவுவது போல்

தமிழகத்தில் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை தடுத்திட கிராமபுற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மார்பு அழுத்தம் கொடுத்திடும் பயிற்சியை அளித்தால் இறப்பு எண்ணிக்கை குறையும் என்பதால்
தஞ்சையில் இன்று அமெரிக்க மருத்துவர்கள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 200 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.

இது குறித்து அமெரிக்க மருத்துவர்கள் கூறுகையில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, இருதய துடிப்பு நின்றுவிட்டால் அவருக்கு ஆம்புலன்ஸ் வரும் வரை மார்பு அழுத்தம் கொடுத்தால் காப்பாற்றலாம், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

அமெரிக்காவில் இது போல் 70 முதல் 80 சதவிகிதம் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் இறப்பை தடுத்திட தமிழகம் முழுவதிலும் பயிற்சி அளித்திட உள்ளோம் என்றார்.
