BREAKING NEWS

இருபது கிராம மக்கள் பங்கேற்ற மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

இருபது கிராம மக்கள் பங்கேற்ற  மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுந்தோறும் ஆவணி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டமும், படுகளம் போடும் நிகழ்வும், அதனை தொடர்ந்து தீமிதியும் நடைபெற்றது. பிரம்மாண்டமான தேரில் அம்பாள் எழுதருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். பின்னர் தேர் தீமிதி குண்டம் அருகில் வந்து நின்றதும், 45 நாள் விரதமிருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமித்து தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றினர். இதில் ஒரத்தநாடு, ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், கக்கரை, வன்னிப்பட்டு உள்ளிட்ட இருபது கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )