உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியம் மற்றும் 25 மாத பி.எப் தொகை வழங்க வேண்டும்,
சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து காலமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆலை அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, பி.எப். தொகை மற்றும் முக்கியமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவும் என்று தெரிவித்தனர்.
காத்திருப்பு போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், ஆலை நிர்வாகத்தை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்