BREAKING NEWS

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர்.

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் மூன்று கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது ..

விருகல் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் அடமான கடன் இருப்புத் தொகையில் அதிமுகாவை சேர்ந்த தலைவர் பிரகாஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் கிதா ஆகியோர் பல கோடி குறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று தெரிவித்த தெரிவித்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் துணை பதிவாளர் கதிரவன் விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறியதின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் காத்திருப்பு போராட்டத்தில் கருப்புசாமி, லோகு உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS