BREAKING NEWS

எடப்பாயில் கடந்த 3 மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழை விவசாயிகள் கவலை.

எடப்பாயில் கடந்த 3 மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழை விவசாயிகள் கவலை.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, பட்டக்காரனூர், மேட்டுப்பாளையம், வெள்ளரிவெள்ளி, கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.

 

 

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில். எடப்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், தினமும் சுமார் 3 மணி நேரமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால், விளைநிலங்களில் மழை நீர் தேங்கி, விவசாயம் பாதிக்கப்படுகிறது. தினசரி கூலி வேலைக்கு செல்பவர்களின் இயல்பு வாழ்க்கையில் முடங்கி கிடக்கிறது.

 

 

எனவே, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )