ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சி வேடியூர் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிவறை மற்றும் பெருமாள் கோவில்பட்டி மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், தானிய களம், உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவங்கப்பட்டது.

நிகழ்வில் கடத்தூர் .திமுக ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், நகர செயலாளர் மோகன், கவுன்சிலர் பச்சையப்பன், சதீஷ்குமார், துணைத் தலைவர் ஹரியண்ணன், வார்டு உறுப்பினர் லட்சுமி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பூமி பூஜையின் போது உடன் இருந்தனர்.
CATEGORIES தர்மபுரி
