ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.10 கோடி ஊக்கத்தொகை! முதல்வர் வழங்கினார்!

பிரேசில் நாட்டில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வென்று பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவித்தார்.
கடந்த1ம் தேதி பிரேசிலில் தொடங்கிய 24வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டி வருகிற 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெ.அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
ஜெ.அனிகா இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்று மொத்தம் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். அனிகாவை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் இந்திய அணி சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த பிரித்வி சேகர் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு 2 வெண்கலப்பதக்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்று பெருமைப்படுத்தினார். எனவே பிரித்வி சேகருக்கு ரூ.35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையாக வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செசய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், கூறும்போது, ‘‘பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீராங்கனை ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் வீரர் பிரித்வி சேகர் ஆகியோருக்கு ரூ.1.10 கோடி ஊக்கத் தொகையை காசோலையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் முடிவுபெற உள்ளது. மஞ்சப்பை வெல்டிங் மெஷின் துவக்கம் கூடிய விரைவில் அதிகமாக நடைபெறும்.
பணம் கட்டினால் மஞ்சப்பை கொடுக்கும் திட்டம் நாளை முதல் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மஞ்சப்பையை விற்கும் நபர்கள் மஞ்சப்பை வெல்டிங் மிஷினை கொண்டு தங்களுடைய மஞ்சப்பை விற்பனையை செய்து கொள்ளலாம். இந்த பைகள் பொது மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது’’ என்று கூறினார்.
