BREAKING NEWS

கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..

கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால், தனிப்பிரிவு கோபி ஆகியோர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், மண் கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்ட கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரும்புலி குணா மற்றும் சில அதிமுக புள்ளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஆய்வாளர் மகாலட்சுமி தன் கட்டப் பஞ்சாயத்து லீலைகளை புரிந்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறது காக்கி வட்டாரம். காளசமுத்திரம் இளையராஜா லாரி 4, தோட்டா வைக்கும் டிராக்டர் 8, ஜே.சி.பி., 2, வண்ணான்குளம் சிவா 2 லாரி, கிருஷ்ணகாந்த் 2 லாரி, பள்ளக்கொல்லை சுந்தர் ஜே.சி.பி., 1, லாரி 2, பாண்டியன் லாரி 2, குப்பம் நேதாஜி 4 லாரி, 1 ஜே.சி.பி., குப்பம் தங்கராஜ் 2 லாரி, ஜே.சி.பி., 1, புதுப்பாளையம் பிரகாஷ் 3 லாரி, ஜே.சி.பி., 1, ரெட்டிபாளையம் நரேஷ் 2 லாரி, ஜே.சி.பி., 1, அத்தி மலைப்பட்டு சுபாஷ் ஜே.சி.பி., 1, லாரி 2, வெள்ளேரிமேடு மணி 2 லாரி,
கொங்கராம்பட்டு கேட் சுரேஷ் 3 லாரி, ஜே.சி.பி., 1 ஆகியவை காவல்துறை மாமூலுடன் தைரியமாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 65 லாரிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மாமூலாக காவல் துறைக்கு கப்பம் கட்டுகின்றனர்.

கடந்த வாரம் இளையராஜவின் லாரிகள் 3 மற்றும் வெள்ளேரி மேடு மணி 2 லாரி
கள் பிடிபட்டன.

அவற்றில் இளையராஜவின் லாரி, மணி 1 லாரி மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு காவல் துறையினர் மீதி லாரிகளை விடுவித்து விட்டனர். எல்லாம் கரன்சி மயம் என்கிறது காக்கி வட்டாரம். காவல்துறை மாமூலுடன் மணல், மொரம்பு மண் கடத்தல் படுஜோராக நடைபெற்று வருகிறது.

இவர்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு காவல் துறையினர் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் அளித்து கொண்டிருக்கின்றனர்.
மாமூல் மழையில் மிதந்து கொண்டு ஆட்டம்போடும் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி வீலைகளுக்கு தற்போது வேலூர் சரக டிஜஜியாக பொறுப்பேற்றுள்ள தர்மலிங்கம் காப்பு கட்டுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கண்ணமங்கலத்தில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துகளும், மாமூல் வசூல் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதே தவிர குறைந்த பாடு இல்லை. திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி குறட்டை விடுவதால் மகாலட்சுமி புகுந்து விளையாடுகிறார்.

இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினால் இவர் சிக்குவது உறுதி என்கிறது காக்கி வட்டாரம். இதற்குப் பிறகும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS