கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல் தங்கவேல், கரூர் அருகே கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல்

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல் தங்கவேல், கரூர் அருகே கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தை துவங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல்.தங்கவேல் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று தங்களது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், கோடங்கிபட்டி அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வெங்கக்கல்பட்டி, காளியப்பனூர், அரசு கலைக் கல்லூரி, பொன் நகர், ராயனூர் ஆர்ச், தாந்தோன்றிமலை, அசோக் நகர், நரிக்கட்டியூர், வெள்ளாளப்பட்டி, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.