கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவருடன் முன்னாள் மக்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் என.நாட்ராயன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
முன்னதாக கரூர் மில்கேட் பகுதியில் இருந்து ஆயித்திற்கும் மேற்பட்ட பிஜேபி கூட்டணி கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். . கரூர் மாவட்டத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதை ஓட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர். வேட்பு மனு அளிக்க அலுவலகத்திற்கு செல்லும் போது வேட்பாளர் உடன் ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர் விவி செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும்.
தமிழக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெறும் 2024 மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்கரிக்க வேண்டும் யாரை பிரதமராக கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சி வழங்கி உள்ளார். ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலத்தில் இரண்டு திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம் நிச்சியமாக பாஜக வெற்றி பெறும். கரூரில் இருந்து ஒரு மாற்றம் பிறக்கும் என்றார்.