கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக கடந்தாண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதுமே பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நூற்றாண்டு விழாவானது கொண்டாடப்பட்டு வந்த நிலையில்…
இன்று கலைஞரின் 101 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுக கழக தொண்டர்களால் பல்வேறு பகுதிகளில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மகிழ்ச்சியோடு இனிப்புகள், உணவு பொட்டலங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு கட்டமாக பார்த்திபனூரில் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர்,பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் , மஞ்சூர்,பொட்டி தட்டி பகுதிகளில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகிய கழக நிர்வாகிகளின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கேக் வெட்டியும் இனிப்புகள்,உணவு பொட்டலங்கள், வழங்கியும் கலைஞரின் பிறந்த நாளை உற்சாகமாக மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர்..