BREAKING NEWS

கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

டெல்டா பாசனத்திற்காக மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் இதையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை தமிழக அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

நேற்றைய தினம் காவிரி வெண்ணாறு கொள்ளிடம் ஆறுகளில் தலா 500 கண்ணாடியும் கல்லணை கால்வாயில் வெறும் 100 கன அடியும் நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்து சேரும் முன்பே அணையில் தேங்கியிருந்த மழை நீரை மட்டுமே திறந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி காவிரியில் 1000 கன அடியும் வெண்ணாற்றில் 1505 கன அடியும் கொள்ளிடத்தில் 110 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது கல்லணை கால்வாயில் நேற்று 100 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை கல்லணை கால்வாயில் பாலங்கள் கட்டும் பணிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )