தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சையை அருகே மேலமானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முகமுது பாரூக். இவருடைய மனைவி பரகத் நிஷா (50). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி சாவியை உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட்டு வல்லத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்த பரகத்நிஷா தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின், சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
