கல்லிடைக்குறிச்சியில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜன்னத், பாத்திமா, பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனார் கூட்டத்தில் கிழக்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அம்பை கிருஷ்ணா கோயில் அருகில் உள்ள பூட்டி கிடக்கும்அரசு மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது.
அம்பை நெடுஞ்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஷாஜிதா நன்றியுரையாற்றினார்.
CATEGORIES திருநெல்வேலி