கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகள் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதாக பல்லடத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பல்லடம் பகுதியில் உள்ள கல்வாரி ஒன்றிற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்தது.

விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
