BREAKING NEWS

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ரஃபீக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் அணி மாவட்ட துணைத்தலைவர் பீமாஸ் உசேன் கலந்து கொண்டு கட்சியின் கட்டமைப்பு, வளர்ச்சி குறித்து பேசினார்கள் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி தண்ணீரை கொண்டு வருவதற்கு நகர்மன்ற சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடியால் பெரியவர், சிறியவர், என பொதுமக்கள் அச்சத்தோடு வாழ்கின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வெறிநாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. களக்காடு வடக்கு பச்சையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள மூங்கிலடி அருகில் உள்ள புதிய பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படாமலும் , இணைப்பு தார்ச்சாலை போடாமலும் ஆபத்தான நிலையில் உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்து தரவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. களக்காடு உப்பாறு இருபுறமும் குப்பை கழிவுகளை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
களக்காடு புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கட்டிட ஆக்கிரமிப்பை அகற்றாத நகராட்சியை கண்டித்து 24.02.2023 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என இச்செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிஃப் பைஜி, கபீர், ஆதம், ஜமீன், ராம்நாடு பீர், முகம்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக களக்காடு நகர துணை தலைவராக கபீர் மற்றும் இணை செயலராக ரஃபீக் தேர்ந்தெடுக்கப்பட்டார் இறுதியில் நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார

Share this…

CATEGORIES
TAGS