BREAKING NEWS

காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.

காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ரெட் கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பாக அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1 – வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் இரத்த தான முகாமினை துவக்கி துவக்கி வைத்து ரத்த தானம் வழங்கிய 50 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா லோகநாதன் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், மருத்துவக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர் ருக்ஜி ராஜேஷ் ஜெயின் காட்பாடி செல்வமணி செயலாளர் பழனியப்பன் பின்தங்கிய குடும்பத்தினர் 50 பேருக்கு அரிசி மற்றும் உணவுப்பொருள் நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Share this…

CATEGORIES
TAGS