காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் இருந்து ஜனார்த்தனன் என்பவர் சென்னைக்கு விற்பனைக்காக
விலை உயர்ந்த பட்டு புடவைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து பட்டு புடவைகளுக்கான உரிய ஆவணம் இல்லாததால் 4 லட்சம் மதிப்புள்ள 70 பட்டு புடவைகள் பறிமுதல் செய்தனர்
அதேபோல் காட்பாடி அடுத்த கசம் பகுதியில் நிலை கண்காணிப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அதே பகுதியில் பொய்கை பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தவரை கையும் களவுமாக பிடித்து செல்வகுமார் இடம் இருந்து 40,990 ரூபாய் மதிப்புள்ள 248 குவாட்டர் பாட்டில்கள் 33 பேர் பாட்டில்கள் ரொக்கம் பணம் 1890 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த செல்வக்குமாரை கைது செய்து இருவரும் போலீசில் ஒப்படைத்தனர் இவர் மீது வழக்கு பதிவு செய்து திருவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.