BREAKING NEWS

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!

கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக சென்று காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே காவலரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு ரகளை செய்த போதை ஆசாமியிடம் கெஞ்சி கூத்தாடி சாவியை திரும்ப பெற்றனர் போலீசார்.

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான். அதிலும் குறிப்பாக காட்பாடி பகுதியில் சர்வசாதாரணமாக கஞ்சா கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்திற்கு நேற்றிரவு அரை நிர்வாணமாக வந்ததார் இளைஞர் ஒருவர். அவர் கஞ்சா போதையில் அங்கிருந்த காவலர்களை சரமாரியாக பேசினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் காட்பாடி காவல் நிலைய போலீசார் திணறினர்

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டார். அதை வாங்குவதற்கு படாத பாடுபட்ட காவலர்கள் அதன் பின்பு அந்த சாவியை வாங்கினர். இதை பார்த்தவர்கள் சிரிப்பை அடக்கி கொண்டனர்.

கஞ்சா போதையில் காவல் நிலையத்திற்கு வந்து தெனாவெட்டாக அமர்க்களம் செய்த அந்த இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் ஒரு சட்டையை கொடுத்து அதை அணிவித்து காட்பாடி ரயில்வே நிலையத்தில் அழைத்து போய் வழியனுப்பி வைத்தனர்.

போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது: அவர் பெயர் சரத் என்றும், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், காட்பாடி பகுதியில் கஞ்சா அடித்து விட்டு இதுபோன்ற பல்வேறு விதமான செய்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவித்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதேபோன்று காட்பாடி குடியாத்தம் சாலையில் லாரியை மடக்கி மாமூல் வசூல் செய்தாராம் இவர் .

இந்த இளைஞரை யாரேனும் தட்டி கேட்டால் தான் கையில் வைத்திருக்கும் பிளேடு அல்லது கத்தியை எடுத்துக்கொண்டு கழுத்தில் வைத்துக்கொண்டு அறுத்து கொள்வேன் என மிரட்டுவது வாடிக்கையாம்.

காவல் நிலையத்திற்கு வந்து கஞ்சா போதை இளைஞர் அட்டகாசம் செய்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவலர்கள் அவரை அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS