BREAKING NEWS

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.

காரைக்காலில் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் தென்னரசு இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தில் புதிதாக படகு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதில் படகுக்கு முக்கிய பகுதியான மோல்டு செய்யப்பட்டு படகு கூட்டில் பொருத்தப் படுவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது படகு கட்டும் பகுதியில் இருந்து திடீர் என கரும்புகை கிளம்பியதை மீன் பிடித் துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் கண்டனர் பின்னர் அங்கு சென்று பார்த்தபோது படகு கட்டுமான பகுதியில் தென்னரசுக்கு சொந்தமான படகின் மோல்ட் எரிந்துகொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் படகின் மோல்டில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர் மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் இருந்த கருவை காட்டில் தீ பற்றியாதல் தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணிநேரம் போராடி தீயை அனைத்தனர்.

 

மேலும் தீ விபத்தில் ரூ.30 மதிப்புள்ள படகின் மோல்ட் எரிந்ததால் படகின் உரிமையாளர் தென்னரசு திடீரென அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பின்னர் சக மீனவர்கள் உடனே அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர் பின்பு இதுகுறித்து சீனியர் எஸ்.பி.மணிஷ் எஸ்.பி.சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் தீ விபத்து நடந்த பகுதியின் அருகே கருவாடு சுட்டு சாப்பிட்டுவிட்டு மது அருந்தியவர்களால் தான் தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என சக மீனவர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS