BREAKING NEWS

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அவினேஷ் என்கிற இளைஞர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது சுதாகர், அவினேஷின் தாயை இழிவாகப் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவினேஷ் சுதாரை ஏப்ரல் 19 ஆம் கத்தியால் வெட்டினார்.

இந்த வழக்கில் அவினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் அவினேஷ் ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்து செல்வதை சுதாகர் தரப்பினர் நோட்டமிட்டுள்ளனர்.

அதில் நேற்றுமுன்தினம் கையெழுத்து போடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து ரத்தினகிரிக்கு அவினேஷ் வந்த போது, அவரை சிலர் பட்டாகத்திகளுடன் கொலை செய்ய முயன்றனர்.

அப்போது அவினேஷ் தப்பி செருப்புகடை ஒன்றுக்குள் ஓடினார். இருந்த போதும் விடாத கும்பல் அவரை துரத்திச்சென்று சரமாரியாக வெட்டிவிட்டு காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள்.

மர்ம கும்ப கும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவினேஷ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சம்பவ இடத்தை துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன், காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

CATEGORIES
TAGS