கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரவு பூதேவி ஸ்ரீதேவி சமேதமாக ஸ்ரீநிவாச பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் சுமந்து கோவிந்தா கோஷமிட்டு கிராமத்தை வலம் வந்தனர். வீடு தோறும் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

தொடர்ந்து பக்தர்கள் இடையர் வேஷமிட்டு சுவாமியை 3 முறை சுற்றி வந்து வழிப்பட்டனர். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதஷ்னம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா. பாண்டுரங்கா கோவிந்தா, லெட்சுமி நரசிம்மா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு கோவிலை வலம் வந்தனர். வான வேடிக்கையுடன் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் நடைப்பெற்றது. வழுக்கு மரததில் ஏறிய இளைஞர்கள் மீது அவர்கள் மரத்தில் ஏற முடியாத வகையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டன இவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.
