BREAKING NEWS

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு.

அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று அவர்களைப் பார்த்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக போரூர் சமயபுரம் வழியாக போரூர் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, ஏறி சென்ற போது சாலை குறுகலாக இருந்தால் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் மைதிலியின் இரண்டு கால்களின் மீது ஏறி இறங்கியதில் அவரது கால்கள் நசுங்கி வழியாக துடித்தார்.

இதனை கண்டதும் அவரது கணவர் தனது மனைவி வலியால் துடிப்பதை கண்டு அவரும் அவரை தூக்கி வைத்துக்கொண்டு கதறி அழுதார்.

இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக குடியிருப்புகள் மிகுந்த இந்த சாலையில் சர்வீஸ் சாலை இல்லாததால் கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாகவும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS