BREAKING NEWS

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

போதைப்பொருளால் சீரழிவோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவோரை மீட்கும் பணியை மேற்கொள்ளும் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்டை பாராட்டுகிறேன் என்று பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் கூறினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தி ஐ புண்டேஷன் கண் மருத்துவமனையும், நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மையம் சார்பில் இயங்கும் மன நல காப்பகமும் இணைந்து கொண்டசமுத்திரம் ஊராட்சியில் உள்ள வாரியார் நகர் சக்தி நகரில் உள்ள டிரஸ்ட் அலுவலகத்தில் 31.3.2025-அன்று கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

முகாமுக்கு டிரஸ்ட் பொருளாளர் கே.எம்.இ.கருணாகரன் தலைமை தாங்கினார். டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் கே.கே.சிவசண்முகம் வரவேற்றார். முகாமை தொடங்கி?வைத்து வக்கீல் குமார் பேசியதாவது:.

இன்று மக்களில் பெருமளவு போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டனர். தமிழ்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

பெண்கள் தங்களது குடும்பத்தினரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க அவர்களோடு அன்போடு பழக வேண்டும். அன்பினால் சாதிக்கலாம்.

மது, புகையிலை, குட்கா என்று பல்வேறு வகைகளில் போதைப் பொருள்கள் இருக்கின்றன.

கல்வி நிலையங்களின் அருகே கூல் லிப் எனப்படும் போதை சாக்லெட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாகியுள்ளனர். இதற்கு மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் நிர்வாகத்தினரை பாராட்டுகிறேன்.

மருத்துவத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றிய கருணாகரன் அவர்கள் தனது மகன் சிவசண்முகத்தை சேவை பணிக்கு அனுப்பியது பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு குமார் பேசினார். நிகழ்ச்சியில் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் (கைத்தறிக் காவலன்) பிச்சனூர் எஸ்.ரமேஷ், பாமக நகர செயலாளர் எஸ்.குமார், பாமக பொறுப்பாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS