குத்தலாம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காவலர்கள் அதிரடி சோதனை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி.நிஷா உத்தரவிட்டார்.
பின்னர் போலீசார் மஃப்டி உடையில் சென்று கஞ்சா மற்றும் குட்கா விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.
இதனை அடுத்து ஏ.ஆர்.டி.எஸ்பி.ரவிச்சந்திரன். குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் அமுதாராணி தலைமையில் குத்தாலம் அஞ்சார்வார்த்தலை கீழவெளி திருவலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்.
இதில் ஆறு கடைகளில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். உடன் காவலர்கள் மனோகர் கலையரசன் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.