குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் 1432- பசலிக்கான வருவாய் கணக்குகள் சரிபார்த்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் குத்தாலம் வட்டத்தை சேர்ந்த 54 வருவாய் கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வுகள் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகளுக்கான மனுக்களும் பெறப்பட்டது.
குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி முன்னிலையில் இறுதி நாளான நேற்று ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அம்பிகாபதி அவர்களால் 13 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 5 நபர்களுக்கு குடும்பத் தலைவர் இறப்பிற்கான ஈமச்சடங்கு நிதியும்,5 நபர்களுக்கு திருமண உதவி தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குத்தாலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சண்முகம்,குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பிரான்ஸ் வா, மயிலாடுதுறை பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் காந்திமதி,துணை வட்டாட்சியர்கள் ராஜன் மற்றும் ராஜூ,நில அளவைப் பிரிவு வட்ட துணை ஆய்வாளர் சபரிநாதன் வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன்,ஜெயந்தி, ஷர்மிளா,கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்மோகன்,சண்முகம்,சங்கர், சுவாமிநாதன்,கிராம உதவியாளர்கள் நல்ல முகமது,சுந்தரம் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.