கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.

தஞ்சாவூர் மாவட்டம்,
சென்னை கும்பகோணம் நான்கு வழி சாலையில் சோழபுரத்தில்
இருமுடி தலையில் வைத்துக் கொண்டு ஐயப்ப பக்தர்
சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்றும் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அனைவரும் கல்லூரி பள்ளி படிப்பு என தற்போது படித்து வருகின்றனர் எனவும் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வரும் நான் சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.
17 வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.
இரவு உணவை கும்பகோணம் அருகே சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர் திருச்சி கரூர் திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.